வெங்கட்பிரபுவின் அடுத்த 'பார்ட்டி'யில் ரெஜினா, சஞ்சிதா, நிவேதா

  • IndiaGlitz, [Saturday,June 24 2017]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு கடந்த ஆண்டு 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஆகிய விபரங்கள் வெளிவந்துள்ளது.

இதன்படி வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தின் டைட்டில் 'பார்ட்டி'. இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா ஆகிய நட்சத்திர கூட்டங்கள் நடிக்கவுள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இந்த படத்தை தயாரிக்கின்றார்.

மேலும் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் முதன்முதலில் பிரேம்ஜி நடிக்கவில்லை. இருப்பினும் அவர் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் சார்பில் 'R.K.நகர்' என்ற படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனுக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் எடுக்கும் வித்தியாசமான முயற்சி

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும் வெளியாகிய செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு

அதிமுகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏவான கருணாஸ் உள்பட 3 எம்.எல்.ஏக்கள் சற்று முன்னர் திடீரென எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு, நெடுவாசலை அடுத்து கமல்ஹாசனின் அடுத்த குரல்

உலக நாயகன் கமல்ஹாசன் திரைத்துறையில் தொடர்ந்து சாதனை செய்வது மட்டுமின்றி அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் தைரியமாக குரல் கொடுத்து வருபவர் என்பதும், அவர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றாலும் அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கும் குணம் படைத்தவர் என்பதும் தெரிந்ததே.

சாமி 2: பெருமாள் பிச்சையை விட 10 மடங்கு பலசாலி வில்லன்

சீயான் விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அரசியலுக்கு முன் சர்வே எடுத்தாரா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது ஒருசில அரசியல் குறித்த கருத்துக்களை பேசினார்.