நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலீஸாக்கும் வெங்கட்பிரபுவின் அடுத்த படம்!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் என்பவர் இயக்கிய 'ஆர்.கே.நகர்' என்ற திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தது. இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒருசில முறை அறிவிக்கப்பட்டு அந்த தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது

இந்த நிலையில் இந்த படம் தற்போது நேரடியாக ‘நெட்பிளிக்ஸில்’ ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளம்பரங்களும் தற்போது ‘நெட்பிளிக்ஸில்’ வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் எதிர்காலத்தில் இன்னும் பல திரைப்படங்கள் நேரடியாக டிஜிட்டலில் ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வைபவ், சனா அல்தாப், சம்பத்ராஜ், அஞ்சனா கிர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது: குடியுரிமை மசோதா குறித்து பிரபல இயக்குனர்

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இரண்டு குழந்தை தான்.. அதுக்கு மேல போனா அரசு சலுகைகள் எல்லாம் கட்..! - எச்சரிக்கும் அமித் ஷா ஜி.

ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேல் குழந்தைகள் பெற்றால், அரசு சலுகைகளை ரத்து செய்யும் சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறார்கள்.

தனுஷ்-மாரி செல்வராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியானது என்பதும் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'பட்டாஸ்'

'குறும்பா' பாடலுக்கு பின் இதுதான்: டி.இமான் வெளியிட்ட தகவல்

தமிழ் திரையுலகின் மெலடி கிங் என்று பெயரெடுத்த இசையமைப்பாளர் டி இமான் அவர்கள் தற்போது 'தலைவர் 168' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. 

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகர்!

மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஏற்கனவே இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்து உள்ளனர் என்ற செய்தியை பார்த்து வருகிறோம்.