வேட்பாளர் பட்டியலை அடுத்து தொகுதியை (டைட்டில்) அறிவித்தார் வெங்கட்பிரபு

  • IndiaGlitz, [Monday,May 29 2017]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தின் தகவல்கள் வேட்பாளர் பட்டியல் போன்று கடந்த மூன்று நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும்போதே, இது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படமாகத்தான் இருக்கும் என்று அனைவராலும் ஊகிக்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நாயகன், நாயகி உள்பட பல தகவல்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டிலை வெங்கட்பிரபு அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'R.K-நகர்' என்று வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான இந்த தொகுதியில் சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே

வைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். நடிகர் பிரேம்ஜி இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ், இசையமைப்பாளர் பிரேம்ஜி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல், கலை இயக்குனர் விதேஷ் மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் ஆகியோர்கள் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியின் 'காலா' படத்தில் இணைந்த நட்சத்திர பட்டாளங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷின் தயாரிப்பில் உருவாகும் 'காலா கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்களை வொண்டர்பார் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது...

மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸ் 'ஸ்பைடர்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது...

ரசிகர்களை சமாதானப்படுத்த சூர்யாவின் கேரம்போர்டு ஸ்டில்

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவில்லை என்பதால் சூர்யா ரசிகர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக சூர்யா ரசிகர்கள் விக்னேஷ் சிவனை மிமீஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கலா

எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி: கமல்ஹாசன் புகழாரம்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து பரபரப்பாக தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கமல் தெரிவித்துள்ளார்...

18% ஜிஎஸ்டி வரியை எதிர்த்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் பொதுமக்கள் குடிநீர் கேன்களையே குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர்...