close
Choose your channels

I am Waiting.. அஜித்தின் 'மங்காத்தா 2' படத்தின் சூப்பர் தகவல் சொன்ன வெங்கட் பிரபு..!

Sunday, April 13, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட் பிரபு, ’மங்காத்தா 2’ படம் குறித்த கேள்விக்கு அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

"மங்காத்தா படம் குறித்த தகவல் ஏதாவது சொல்ல முடியுமா?" என்ற கேள்விக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. எல்லோருக்கும் மாதிரி எனக்கும் ஆசை இருக்கு. அஜித்துக்கும் ஆசை இருக்கும். சுரேஷ் சந்திரா சார் அவர்களுக்கும் ஆசை இருக்கும். அந்த படத்தின் மீது ஒரு லவ் எல்லோருக்குமே இருக்குது.

’மங்காத்தா 2’ பண்ணலாமா அல்லது வேற படம் பண்ணலாமா என்ற ஆலோசனை இருக்கிறது. ஆனால் அது நடக்குமா என்பது எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. நான் எந்த பெரிய வெற்றிப் படமும் கொடுக்காத நிலையில் தான் அஜித் என்னை கூப்பிட்டு வாய்ப்பு அளித்தார். ’சென்னை 28, சரோஜா கோவா என பசங்களை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த நிலைமையில் தான் என்னை முதல் முறையாக நம்பி, ஒரு பெரிய படத்தை ஏகே கொடுத்தார்.

 

இயக்குனர்களை அவர் எப்படி தேர்வு செய்வார் என்றெல்லாம் எனக்கு தெரியாது. சென்னை 28 முடிந்த உடனே நாங்கள் இருவரும் படம் பண்ண முயற்சித்தோம். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன் பிறகு மங்காத்தா தான் நடந்தது. மங்காத்தா 2 படத்திற்கும் எல்லோரும் மாதிரி, நானும் 'ஐம் வெயிட்டிங்' என்று கூறினார்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment