'மங்காத்தா' அர்ஜூன் கேரக்டரில் நடிக்க வேண்டியவர் இவரா? இது சமந்தாவுக்கு தெரியுமா?

அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’மங்காத்தா’ திரைப்படத்தில் உள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுன் கேரக்டரில் முதலில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்டவர் இவர்தான் என்று இயக்குனர் வெங்கட்பிரபு பேட்டில் ஒன்றில் கூறியுள்ள நிலையில் இந்த தகவல் சமந்தாவுக்கு தெரியுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

’மங்காத்தா’ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் போலீஸ் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நாகசைதன்யா என சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த படம் 2011ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த நேரத்தில் நாக சைதன்யாவை சமந்தா காதலித்து வந்தார் என்பதால், இந்த தகவல் கண்டிப்பாக சமந்தாவுக்கு தெரிந்திருக்கும் என்றே நெட்டிசன்கள் இந்த பேட்டிக்கு கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

ஒரு சில காரணங்களால் நாகசைதன்யா ’மங்காத்தா’ படத்தில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது நான் இயக்கும் தமிழ் தெலுங்கு படத்தில் நாக சைதன்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் வெங்கட்பிரபு அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

More News

டக்குன்னு தமன்னா தான்னு நினைச்சிட்டேன்: ப்ரியா பவானிசங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை ப்ரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் திடீரென சற்றுமுன்னர் தமன்னா ஸ்டைலில்

ரஜினி பாராட்டியதை வெளியே சொல்லி விளம்பரம் தேட விருப்பமில்லை: விஜய்சேதுபதி பட இயக்குனர்

விரைவில் வெளியாக இருக்கும் விஜய் சேதுபதியின் படத்தை இயக்கிய இயக்குனர், 'ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து பாராட்டியதை வெளியே சொல்லி விளம்பரம் தேட விரும்பவில்லை என கூறியுள்ளார்

வெறும் ராஜமெளலி அல்ல, மஹா ராஜமெளலி: 'ஆர்.ஆர்.ஆர்' படம் குறித்து பிரமாண்ட இயக்குனர்

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பிரமாண்டமான திரைப்படமான 'ஆர்.ஆர்.ஆர்'  நேற்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்த படம் வெளியானது

ஏ.ஆர்.ரஹ்மானின் துபாய் ஸ்டுடியோவில் தமிழக முதல்வர்: வைரல் புகைப்படங்கள்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துபாயில் உள்ள ஏஆர் ரகுமானின் இசை ஸ்டூடியோவுக்கு சென்றுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

மாஸ்டர் நடிகரின் படத்திற்காக பாட்டு பாடிய ஜீவி பிரகாஷ் - சிவாங்கி!

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக ஜிவி பிரகாஷ் மற்றும் சிவாங்கி பாடிய பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.