தில் ராஜூ பாணியில் பேசிய வெங்கட்பிரபு.. 'கஸ்டடி' புரமோஷன் விழாவில் கலகல..!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, அந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசியது போலவே ’கஸ்டடி’ படத்தின் புரமோஷன் விழாவில் வெங்கட் பிரபு பேசியது மேடையை கலகலக்க வைத்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ’கஸ்டடி’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதி கட்டப் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் ’கஸ்டடி’ படத்தின் புரமோஷன் விழாவில் வெங்கட் பிரபு பேசியபோது ’இந்த படத்தில் ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்சன் வேணுமா ஆக்சன் உந்தி, பெர்பார்மன்ஸ் வேணுமா பெர்மான்ஸ் உந்தி, ஃபேமிலி சென்டிமென்ட் வேணுமா ஃபேமிலி சென்டிமென்ட் உந்தி ,என்ன வேணும் எல்லாம் உந்தி, இந்த படத்துல மாஸ் வேணுமா மாஸ் உந்தி என்று தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளை கலந்து பேசினார்.

முன்னதாக ‘வாரிசு’ படத்தின் புரமோஷன் விழாவில் தில் ராஜு பேசியபோது ’டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா பைட் இருக்கு’ என்று பேசிய நிலையில் அதே பாணியில் நேற்று வெங்கட் பிரபு பேசியது மேடையில் இருந்த அனைவரையும் கலகலக்க வைத்தது. குறிப்பாக நாக சைதன்யா, வெங்கட் பிரபுவின் பேச்சைக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ராதிகா, சரத்குமார், சம்பத்ராஜ், பிரேம்ஜி, பிரியாமணி, வெண்ணிலா கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ள ல் இந்த படம் வரும் மே 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

அட்லி மிஸ் செய்த தேதியில் ரிலீஸாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதி திரைப்படம்..!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவான 'ஜவான்' என்ற திரைப்படம் ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் எலிமினேட் ஆனவுடன் ஷெரின் எங்கே சென்றார் தெரியுமா? வைரல் வீடியோ..!

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேட் ஆன நடிகை ஷெரின் தற்போது கோவா சென்றுள்ள நிலையில் அங்கிருந்து வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விருது நிகழ்ச்சியில் இவ்ளோ கிளாமரா? நடிகை ஸ்ரேயாவின் புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்!

கிளாமர் மற்றும் க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

'லியோ' படப்பிடிப்புக்கு வந்த த்ரிஷாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்.. க்யூட் புகைப்படம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட த்ரிஷாவுக்கு படக்குழுவினர் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்த

திருமணத்திற்காக மதம் மாறினேனா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு..!

நடிகை குஷ்பு திருமணத்திற்காக மதம் மாறியதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் அந்த பதிவுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.