அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா? நம்பவே முடியவில்லை.. வெங்கட் பிரபுவின் சோக ட்வீட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


’அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா நம்பவே முடியவில்லை’ என இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் செய்த சோகமான பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த ஆண்டு காலமான நிலையில் இன்று அவரது பிறந்த நாள் என்ற நிலையில் தங்கை பவதாரிணி குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் சோகத்துடன் ஒரு பதிவை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே நாளில் தனது தங்கைக்கு வாழ்த்து கூறிய புகைப்படத்தையும் பதிவு செய்து ’அதற்குள் ஒரு ஆண்டு ஆகிவிட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி’ என்று பதிவு செய்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி இலங்கையில் காலமானார். 47 வயதில் அவர் காலமானது இளையராஜா குடும்பத்திற்கு மட்டுமின்றி இசை குடும்பத்துக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாகவும் கூறப்பட்டது.
Can’t believe it’s one year already 💔 💔 💔 happy bday thangachi #bhavatharini https://t.co/YSBPUWPQlE
— venkat prabhu (@vp_offl) February 12, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments