'மன்மதலீலை' ரிலீஸ் எப்போது: வெங்கட்பிரபு டுவிட்!

சிம்பு நடித்த ‘மாநாடு’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் 'மன்மதலீலை’ இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இன்று காலை காட்சி வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக கூறப்பட்டது .

இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில், ’கடவுள் இருக்கிறார். சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக 'மன்மதலீலை’ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இன்று மதியம் முதல் திரையரங்குகளில் 'மன்மதலீலை’ ரிலீசாகும். அனைவரும் பார்த்து மகிழுங்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் 'மன்மதலீலை’ திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், பிரேம்ஜி அமரன் இசையில், தமிழழகன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தில் அசோக்குமார், சம்யுக்தா மேனன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

More News

சன் டிவியின் 'பீஸ்ட்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவரா? செம காமெடி இருக்கும்போல!

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில்

டுவிட்டரில் இணைந்த சுதா கொங்கராவிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வி!

மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்காரா நேற்று டுவிட்டர் இணையதளத்தில் முதல் முறையாக இணைந்துள்ளார்.

இன்று ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் பட்டியல் இதோ!

கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி பிளாட்பார்ம் அறிமுகமானதிலிருந்து மக்களுக்கு வீடு தேடி திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

சமந்தாவின் 'ஓ சொல்றியா மாமா' பாடலின் நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்ற சமந்தாவின் ஐட்டம் பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த நடன இயக்குனர்

'பீஸ்ட்' படத்தில் தளபதி விஜய்யின் மாஸான கேரக்டர் பெயர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.