இன்று முதல் சன் டிவி பாருங்கள்.. 'குக் வித் கோமாளி'யை மிஸ் செய்த வெங்கடேஷ் பட் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,April 28 2024]

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் கடந்த நான்கு சீசன்களில் நடுவராக கலந்து கொண்ட வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இல்லை என்பதும் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொண்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் வெங்கடேஷ் பட் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் ஆனாலும் இந்த சீசன் மற்ற சீசன்களை போலவே கலகலப்பாக இருக்கிறது என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் இன்று முதல் சன் டிவி பாருங்கள் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

எப்படி சொல்வது என்றே தெரியவில்லை, நீங்கள் எல்லாம் என்னை மிஸ் பண்ணுகிறீர்கள் என்று மெசேஜ் அனுப்பியதை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், என் மீது அன்பு வைத்திருந்த உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி.

என்றைக்குமே உங்களை நான் ஏமாற்ற மாட்டேன், என்றைக்கும் உங்களை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன், உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி சொல்கிறேன், இன்று முதல் சன் டிவியில் காலை 8 மணிக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது, எட்டு மணியிலிருந்து சன் டிவி பாருங்கள், உங்கள் எல்லோருடைய அன்புக்கு நன்றி’ என்று வெங்கடேஷ் பட்ட அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More News

அப்பாங்க எல்லாம் அப்படித்தான்.. புரிஞ்சிக்கவே மாட்டாங்க.. சமுத்திரக்கனியின் 'ராமம் ராகவம்' டீசர்..!

சமுத்திரகனி நடித்த 'ராமன் ராகவம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் யாரை கைகாட்டினாலும் எனக்கு ஓகே தான்: எஸ்ஜே சூர்யா வீடியோ வைரல்.!

மே ஒன்றாம் தேதி ராகவா லாரன்ஸ் யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு உதவி செய்ய தயார் என எஸ்ஜே சூர்யா வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மூன்றாவது முறையாக விண்வெளிக்கு செல்ல தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்.

இந்த பயணத்தில் ஏவுகணையை வரும் மே 6ஆம் தேதி இரவு 10.34மணிக்கு அனுப்புவதாக திட்டமிடபட்டுள்ளது.விண்வெளியில் அதிக முறை சென்று வந்த பெண் என்ற சாதனைக்கு உரியவர் நமது விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ்...

ராஜூ முருகன் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? 2 படங்களை ஒதுக்கிவிட்டு இணைவதாக தகவல்..!

ராஜூ முருகன்  இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரீரிலீஸ் பட்டியலில் விஜய் சேதுபதியின் 2 சூப்பர் ஹிட் படங்கள்.. ரசிகர்கள் ரெடியா?

கடந்த சில மாதங்களாக சூப்பர் ஹிட் ஆன பழைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக விஜய் நடித்த 'கில்லி'