அரசியல் களத்தில் இறங்குகிறாரா வெங்கட்பிரபு?

  • IndiaGlitz, [Thursday,May 25 2017]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தில் 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட்பிரபுவின் பிளாக்டிக்கெட் கம்பெனி தயாரிக்கவுள்ள அடுத்த படம் குறித்த முழு தகவல்கள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் 'நாளை முதல் வேட்பாளர் அறிமுகம்' என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் இருந்து அவரது அடுத்த படம் அரசியல் படமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

ரஜினி உள்பட பல திரையுலக பிரபலங்கள் அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் அரசியல் படமாக இருந்தால் அந்த படம் தற்கால அரசியல் குறித்த காரசாரமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஓர் ஆண்டு ஆட்சி: இமெயில் அனுப்பி பாராட்டிய கமல்ஹாசன்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக அரசு பொறுப்பேற்று ஓரு ஆண்டு நிறைவு பெற்றது என்பதை அனைவரும் அறிவோம்

ஏ.ஆர்.ரஹ்மான் என்னை மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து சென்றுவிட்டார். சச்சின்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வரும் வெள்ளி அன்று தமிழ் உள்பட இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

'பாகுபலி 2', ரஜினி குறித்து சச்சின் கூறியது என்ன தெரியுமா?

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சினின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தேசிய விருது பெற்ற பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்த நடிகர் சசிகுமார், விரைவில் தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய சீனுராமசாமி படத்தில் நடிக்கவுள்ளார்.

ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் கமல், அமிதாப், மோகன்லால், நாகார்ஜூனா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் இந்தியாவில் பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அதிகரித்து கொண்டே வருகிறது.