'வாணி ராணி' நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இல்லை: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

நடிகை ராதிகாவின் ’வாணி ராணி’ உள்பட பல சின்னத்திரை தொடர்களிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் வேணு அரவிந்த் அவர்கள் கோமாவில் நிலையில் இருப்பதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்று காலை செய்திகள் வெளியானது. இது குறித்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சின்னத்திரையின் பிரபல நடிகர் அருண் ராஜன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வேணு அரவிந்த் அவர்கள் கோமாவில் இல்லை என்றும் அவர் தற்போது நினைவுடன் தான் இருக்கிறார் என்றும் தனக்கு செய்யப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்து வருகிறார் என்றும் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

நான் சில நிமிடங்களுக்கு முன்னர் தான் வேணு சார் அவர்களின் மனைவி ஷோபா அவர்களிடம் பேசினேன் என்றும் வேணு சார் தற்போது மிகவும் நலமாக இருப்பதாகவும் கண்டிப்பாக அவர்கள் முழு குணமாகி வீடு திரும்பி விடுவார் என்றும் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும் கடந்த சில மாதங்களாகவே அவர் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது உண்மைதான் என்றும் ஆனால் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தயவுசெய்து வேணு அவர்கள் கோமாவில் இருப்பது போன்ற தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அருண் ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

ஷகிலாவுக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் மாறி, 'ஷகிலா அம்மா' என்ற இமேஜுக்கு மாறியவர் நடிகை ஷகிலா என்பது தெரிந்ததே

திரையரங்குகள் திறக்க அனுமதியா? நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அதன் பின்னர் கொரோனா

ஷில்பா ஷெட்டியும் கைதாக வாய்ப்பா? மும்பை போலீஸார் சொல்வது என்ன?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா என்பவர் ஆபாச படம் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்

வித்தியாசமான மேக்கப்பில் சூப்பர் சிங்கர் பிரகதி: கலாய்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்து பிரபலமானவர் பிரகதி குருபிரசாத் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் ஆஜித் தான்

டீன் ஏஜில் பிகினி போஸ் கொடுத்த இலியானா: வைரல் புகைப்படம்

பிரபல நடிகை இலியானாவுக்கு தற்போது 33 வயது ஆகும் நிலையில் அவர் டீன் ஏஜில் இருக்கும் போதே பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம்