பழம்பெரும் நடிகரின் மகனுக்கு இரண்டாவது திருமணம்.. கொரோனாவுக்கு முதல் மனைவியை இழந்தவர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பழம்பெரும் நடிகரின் மகனுக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் என்பதும், இவர் பல ஆக்ஷன் மற்றும் காமெடி படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன், கடந்த 1999ஆம் ஆண்டு 'மானசீக காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதன் பிறகு ’வடுகப்பட்டி மாப்பிள்ளை’, ’புன்னகை தேசம்’, ’ஜூனியர் சீனியர்’, ’நேற்று வரை நீ யாரோ’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு ’பிறகு’ என்ற படத்தில் நடித்த பிறகு, அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை.
இந்த நிலையில், அவருடைய முதல் மனைவி ரேஷ்மா கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலமானார்.
தற்போது, இன்று அவர் நிமிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம், ஹிந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றதாகவும், திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஹம்சவர்தனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com