நடிகர் சரத்பாபுவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

  • IndiaGlitz, [Thursday,March 30 2023]

ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகர் சரத்பாபு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1977 ஆம் ஆண்டு ’பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு. ’நிழல் பார்க்கிறது’ ’வட்டத்துக்குள் சதுரம்’ ’முள்ளும் மலரும்’ ’முடி சூடா மன்னன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக கமலஹாசன், ரஜினிகாந்த் படங்களில் நண்பர் கேரக்டர் என்றால் உடனே சரத் பாபுவை தான் இயக்குனர்கள் கூப்பிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என சுமார் 200 படங்களுக்கு மேல் நடிகர் சரத்பாபு ஹீரோ மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சரத்பாபு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருடைய உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து சரத்பாபு விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 

More News

மாலையும் கழுத்துமாக மனைவியுடன் நடிகர்-இயக்குனர் பாண்டியராஜன்.. வீட்ல என்ன விசேஷம்?

நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் தனது மனைவியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் அவரது மகன் பிரித்விராஜன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

என் விரல்கள் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன.. பிரபல நடிகையின் சர்ச்சை பதிவு..!

பிரபல மலையாள நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'என் விரல்கள் தொடை வழியாக பயணம் செய்கின்றன' என சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை பதிவு செய்து நிர்வாணமாக இருக்கும்

எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென போன் செய்த நடிகர் அஜித்.. என்ன காரணம்?

முன்னாள் தமிழக முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் அஜித் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தற்கொலை செய்ய முடிவெடுத்த தனுஷ் நாயகி.. ஆறுதல் கூறி காப்பாற்றிய ராகுல் காந்தி..!

 தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' சிம்பு நடித்த 'குத்து' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா தனது தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும் ஆனால் ராகுல் காந்தி தான் தனக்கு ஆறுதல்

யாரிடமும் கெஞ்ச மாட்டேன்: சம்பள விவகாரம் குறித்து சமந்தா..!

ஹீரோவுக்கு சமமான சம்பளம் வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரிடம் நான் கெஞ்ச மாட்டேன் என நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.