'வாத்தி கம்மிங்' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட 62 வயது நடிகை: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடல் வேற லெவலில் வைரல் ஆனது என்பதும் உலகம் முழுவதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது என்பதும் தெரிந்தது.

கிரிக்கெட் வீரர்கள், நடிகர் நடிகைகள் உள்பட பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பாடல் இந்த அளவுக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது இப்போதைக்கு இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரின் தாயாருமான நீட்டுகபூர், சமிபத்தில் நடந்த ரியாலிட்டி ஷோ ஒன்றில் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சிறுவன் ஒருவனுடன் நடனம் ஆடி உள்ளார். இந்த பாடலுக்கு விஜய் போட்ட ஸ்டெப்பை அப்படியே அச்சு அசலாக 62 வயதான நீட்டு கபூர் ஆடியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

‘வாத்தி கம்மிங்’ பாடலின் பாடல் வரிகள் பலருக்கு புரியாவிட்டாலும் அந்த பாடலின் இசை உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜூன் 28 முதல் தொலைதூர பேருந்துகளும் இயங்கும்: போக்குவரத்து துறை அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 22 முதல் ஜூலை 5 வரை ஊரடங்கு நீடிக்கும் என தமிழக முதல்வர் நேற்று அறிவித்ததோடு கூடுதல் தளர்வுகளையும் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கார், நோபல் விருதுகள் கொடுக்க வேண்டும்: செல்லூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் நல்லவேளை நான் பிழைத்து விட்டேன் என்றும் எனக்கு பதிலாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாட்டிக் கொண்டார் என்றும் காமெடியாக கூறியிருப்பது

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' அப்டேட் தந்த படக்குழுவினர்!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'கோடியில் ஒருவன்' என்ற திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

12 மாம்பழங்களை ரூ.1.20 லட்சத்திற்கு வாங்கிய தொழிலதிபர்: காரணத்தை கேட்டால் அசந்துவிடுவீர்கள்!

ஒரு மாம்பழம் ரூபாய் பத்தாயிரம் என 12 மாம்பழங்களை 1.20 லட்சம் ரூபாய்க்கு தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அப்படி என்ன அந்த மாம்பழத்தில் ஸ்பெஷல் என்றால் எதுவுமே இல்லை

என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

முதல் முறையாக தமிழில் வெளியான தனிப்பாடல் ஒன்றுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது