'லால் சலாம்' படத்தில் இணைந்த காமெடி நடிகர்: நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினியுடன் நடிக்கின்றாரா?

  • IndiaGlitz, [Wednesday,March 15 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ திரைப்படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் தொடங்கியது என்பதும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 35 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ’லால் சலாம்' திரைப்படத்தில் பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எஜமான், அருணாச்சலம், முத்து, வீரா, படையப்பா உள்பட பல திரைப்படங்களில் நடித்த செந்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் ’லால் சலாம்’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டு கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருடைய தங்கையாக நடிகை ஜீவிதா நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. 33 வருடங்கள் கழித்து தமிழ் திரைப்படத்தில் ஜீவிதா ரீஎண்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஷாருக்கான் - அட்லியின் 'ஜவான்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றமா? என்ன காரணம்?

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

நிறைவு கட்டத்தை நெருங்கும் 'தங்கலான்' .. அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

 இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ரவீந்தர்-மகாலட்சுமி ’வீட்ல விசேஷம்’.. வைரல் வீடியோ..!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்

சிம்புவின் 'பத்து தல' ஆடியோ ரிலீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கின என்பதை ஏற்கனவே

மணிமேகலையின் கணவர் ஹூசைனை தெரியும், தம்பியை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்..!

 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த மணிமேகலையின் சகோதரர் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.