close
Choose your channels

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

Monday, September 10, 2018 • தமிழ் Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்கள் ஏற்கனவே மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz