எம்ஜிஆர் முதல் உதயநிதி வரை 500 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Friday,April 29 2022]

சிவாஜிகணேசன் முதல் உதயநிதி வரை பல பிரபலங்களின் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ரங்கம்மாள் பாட்டி. கோவையை சேர்ந்த இவர் எம்ஜிஆர் நடித்த ’விவசாயி’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1967ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜீத், விஜய் , விஷால், உதயநிதி என பல நடிகர்களுடன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் காரணமாகவும் வயது முதிர்வாலும் சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் பாட்டி இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான தெலுங்குபாளையத்தில் நடக்கும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

40 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து போதிலும் அவர் கடைசியில் ஒரு கூரை வீட்டில் தான் தங்கி இருந்தார் என்றும், அவரை அவரது சகோதரி மற்றும் அவரது மகன் இறுதிக்காலத்தில் கவனித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நயன்தாரா நயன்தாராதான்: அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை; சொன்னது யார் தெரியுமா?

நயன்தாரா, நயன்தாரா தான் என்றும் அவரைப் போல் இன்னொருவர் இல்லவே இல்லை என்று பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

11 வருடங்களுக்கு முன் இதே நாளில்: அஜித் ஏற்படுத்திய பரபரப்பு என்ன தெரியுமா?

 11 வருடங்களுக்கு முன் இதே நாளில் அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி அஜீத் வெளியிட்ட ஒரு அறிக்கை அவரது கோடிக்கணக்கான

மிஷ்கின் இயக்கிய 'பிசாசு 2' படத்தின் த்ரில் டீசர்

மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

பிரபல நடிகைக்கு தென்னிந்திய திரையுலகமே சேர்ந்து நடத்தும் பாராட்டு விழா!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகையாக இருந்த ரோஜா சமீபத்தில் அமைச்சரான நிலையில் அவருக்கு தென்னிந்திய திரையுலகமே இணைந்து பாராட்டு விழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.