தனுஷ்-வெற்றிமாறனின் விசாரணையைப் பாராட்டிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

  • IndiaGlitz, [Monday,February 15 2016]

சமீபத்தில் ரிலீஸ் ஆன 'வெற்றிமாறன்' இயக்கிய விசாரணை திரைப்படம், ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட திரையுலக விஐபிக்களின் மாபெரும் பாராட்டுக்களையும் பெற்றது.


இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மேலும் ஒருசில படங்கள் ரிலீஸ் ஆனபோதிலும், தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக இந்த படம் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் P.N.பிரகாஷ் அவர்கள் இந்த படத்தை பார்த்தார். அவருடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளும் பார்த்தனர்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நீதிபதி P.N.பிரகாஷ், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் கதாசிரியர் சந்திரகுமார் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

More News

கீர்த்திசுரேஷின் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு பிர்யதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம்...

கில்லி'யின் ரேஸ் த்ரில்லருக்கு இணையாக விஜய் 60'. படக்குழுவினர் உறுதி

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளிவந்த 'கில்லி' திரைப்படம், விஜய்யின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத ஒரு படம்...

ஜீவா- நயன்தாராவின் 'திருநாள்' ரிலீஸ் தேதி

கடந்த 2006ஆம் ஆண்டு எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'ஈ' படத்தில் ஜோடியாக நடித்த ஜீவா-நயன்தாரா ஜோடி மீண்டும்...

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரிலீஸ் தேதி

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினி, விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றார்...

கார் விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த சூர்யா-கார்த்தி நாயகி

பிரபல நடிகை ப்ரணிதா நேற்று படப்பிடிப்பு ஒன்றுக்காக 'கம்மம்' என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது...