பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா.சீனிவாசன் காலமானார்

  • IndiaGlitz, [Tuesday,May 29 2018]

பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் இன்று காலமானார். அவருக்கு வயது 88

சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கவும் தயாரிக்கவும் செய்தவர். சிவாஜி கணேசன் நடித்த அந்தமான் காதலி', 'கீழ்வானம் சிவக்கும்', 'கமல்ஹாசனின் 'நாயகன்', சிம்லா ஸ்பெஷல், ரஜினிகாந்த் நடித்த 'சிவப்பு சூரியன், 'பொல்லாதவன்' ஆகியவை இவர் தயாரித்த முக்கிய படங்கள் ஆகும்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100வது படமான 'சூரியகாந்தி' படத்தை இயக்கியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த பழம்பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசனுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

'காலா' படத்திற்கு கர்நாடகா தடை: 

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

தூத்துகுடி செல்கிறார் ரஜினிகாந்த்

சமீபத்தில் தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய அந்த பகுதி மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அப்பாவிகள் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

'அருவி' இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல்

அதிதி பாலன் நடிப்பில் இயக்குனர் அருண்பிரபு இயக்கிய 'அருவி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பிரபல பாடகர் சுட்டுக்கொலை: காதல் விவகாரமா?

பிரபல பஞ்சாப் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவாவின் அடுத்த படத்தின் நாயகியாகும் மிஸ் ஹிமாச்சல் பிரதேஷ்

நடிகர் ஜீவா தற்போது நடித்து வரும் 'கொரில்லா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் பிரபல இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும்