close
Choose your channels

சூர்யா-வெற்றிமாறன் படத்தின் புரட்சியான டைட்டில் அறிவிப்பு

Sunday, January 12, 2020 • தமிழ் Comments

சூர்யா-வெற்றிமாறன் படத்தின் புரட்சியான டைட்டில் அறிவிப்பு

 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடித்த ’அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன், சூர்யா நடிப்பில் தன்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்தின் டைட்டில் ‘வாடிவாசல்’ என்று அறிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு மெரினாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ‘வாடிவாசல்’ என்ற சொல் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் சுதந்திர போராட்டத்திற்கு பின்னர் வெற்றி பெற்ற ஒரே போராட்டமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த படமாக இந்த படம் இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த டைட்டிலே படத்தின் எதிர்பார்ப்பை எகிற  வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Get Breaking News Alerts From IndiaGlitz