close
Choose your channels

வெற்றிமாறனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

Sunday, January 5, 2020 • தமிழ் Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தனுஷ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் இது தான் என்றும், இந்த படம் தனுஷூக்கு மட்டுமின்றி வெற்றிமாறனின் திரையுலக வாழ்விலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் சமீபத்தில் தனது 100வது நாளை பூர்த்தி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெற்றிமாறன் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் இந்த படத்திற்கு முன்பே வெற்றிமாறன் இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார். அந்த படத்தில் சூரி நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்த பின்னர்தான் அவர் சூர்யாவின் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன் அதில் ’தன்னுடைய இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளார். இந் நிறுவனம் ஏற்கனவே கவுதம்மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நடுநிசி நாய்கள்', ‘நீதானே என் பொன்வச்நதம்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz