close
Choose your channels

வெற்றிமாறனின் துணை இயக்குனர் விபத்தில் மரணம்.. நடிகரின் கார் மோதியதா?

Thursday, June 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரின் கார் மோதிய விபத்தில் வெற்றிமாறனின் துணை இயக்குனர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’வடசென்னை’ ’அசுரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் சரண்ராஜ். இவர் நேற்று நள்ளிரவு 11:30 மணி அளவில் கேகே நகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் அவரது பைக் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சரண்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சரண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரண்ராஜ் மீது மோதிய காரை ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் பெயர் பழனியப்பன் என்றும் அவர் துணை நடிகராக சில படங்களில் நடித்திருப்பது தெரியவந்தது. மேலும் பழனியப்பன் காரை குடி போதையில் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos