வெற்றிமாறன் பாராட்டிய போலீஸ் படம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் காவல்துறை சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் அவற்றில் ஒருசில திரைப்படங்கள் மட்டுமே அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு காவல்துறை படமான ‘விசாரணை’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் வெளிவரவிருக்கும் இன்னொரு காவல்துறை சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒன்றினை பாராட்டியுள்ளார். அந்த படம் தான் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற திரைப்படம்

இந்த படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியபோது, ’ஒரு நிஜத்துக்கு ரொம்ப பக்கத்துல இருக்கும் ஒரு படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு இந்த படம் எனக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த மாதிரி ஒரு படத்தின் கதையை எழுதுவது, ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சி எடுப்பது, அதேபோல் இந்த மாதிரி ஒரு படத்தை தயாரிப்பது என அனைத்துக்கும் நிறைய தைரியம் வேண்டும். அதுமட்டுமின்றி இந்த மாதிரி படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஒரு நம்பிக்கை வேண்டும். இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து ரிலீஸ் செய்பவருக்கும், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்

சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம்கோபி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். ஆதித்யா-சூர்யா இசையில் விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவில் வடிவேல் விமல்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது