வெற்றிமாறன் பாராட்டிய போலீஸ் படம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் காவல்துறை சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் அவற்றில் ஒருசில திரைப்படங்கள் மட்டுமே அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு காவல்துறை படமான ‘விசாரணை’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் வெளிவரவிருக்கும் இன்னொரு காவல்துறை சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒன்றினை பாராட்டியுள்ளார். அந்த படம் தான் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற திரைப்படம்

இந்த படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறியபோது, ’ஒரு நிஜத்துக்கு ரொம்ப பக்கத்துல இருக்கும் ஒரு படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு இந்த படம் எனக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த மாதிரி ஒரு படத்தின் கதையை எழுதுவது, ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற முயற்சி எடுப்பது, அதேபோல் இந்த மாதிரி ஒரு படத்தை தயாரிப்பது என அனைத்துக்கும் நிறைய தைரியம் வேண்டும். அதுமட்டுமின்றி இந்த மாதிரி படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஒரு நம்பிக்கை வேண்டும். இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து ரிலீஸ் செய்பவருக்கும், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்

சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம்கோபி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆர்.டி.எம் இயக்கியுள்ளார். ஆதித்யா-சூர்யா இசையில் விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவில் வடிவேல் விமல்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது

More News

ஸ்ருதிஹாசன் பிறந்த நாளில் விஜய்சேதுபதி படக்குழு தரும் பரிசு

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுவதை அடுத்து அவர் நடித்தி வரும் 'லாபம்' என்ற படத்தின் படக்குழுவினர் ஒரு பாடலை பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளனர் 

விஷால் நடிக்க முடியாது என கூறினார்: பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

விஷால், கார்த்தி, சாயிஷா நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது

39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்!

செஞ்சி பகுதியைச் சேர்ந்த கடல் கன்னி என்ற 39 வயது பெண் கணவரை இழந்தவர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். விவசாயத்துக்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த

குளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ

டூவீலரில் செல்லும் இளைஞர்கள் பல்வேறு சாகசங்களை செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே

பிக்பாஸ் தர்ஷன் முதல் படம் குறித்த தகவல்: வைரலாகும் வீடியோ!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.