ரிலீசுக்கு 2 நாள் இருக்கும் போது வெற்றிமாறன் செய்த கரெக்சன் ..! என்ன மாற்றம் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,March 29 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ’விடுதலை’ படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது என்பதும், சென்சார் பணிகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விடுதலை’ திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் டப்பிங்கில் அவர் சில கரெக்‌ஷன் செய்ததாக தெரிகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் தனது படத்தில் உள்ள அனைத்துமே பெர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் என்பதும் அதன் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் கூட அவர் டப்பிங் கலைஞர்களை வரவழைத்து சில மாற்றங்களை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.

More News

'மருதநாயகம்' படத்தில் கமலுக்கு பதில் இந்த பிரபல நடிகரா? கைகொடுக்குமா மாஸ்டர் பிளான்..!

 கமல்ஹாசனின் கனவு படம் என்றால் அது 'மருதநாயகம்' தான் என்பதும் கடந்த 1997ம் ஆண்டு இந்த படத்தை எடுக்க அவர் முயற்சி செய்த நிலையில் பட்ஜெட் காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது

'ஏகே 62' படத்தை அடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த படமும் டிராப்?

அஜித் நடிக்க இருக்கும் 'ஏகே 62' என்ற திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

குறைவாக சம்பளம் கொடுத்ததால் திருடினேன்.. ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி வாக்குமூலம்..!

ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி, காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தனக்கு குறைவாக சம்பளம் கொடுத்ததால் தான் திருடினேன் என்றும் தான் திருடுவதற்கு காரணம் ஐஸ்வர்யாவின்

நியூஸ் ரீடர் கண்மணியின் வளைகாப்பு நிகழ்ச்சி.. கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு..!

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

பைக், கார்களுக்கு பதில் வித்தியாசமான பரிசு கொடுத்த வெற்றிமாறன்.. உதவி இயக்குனர்கள் மகிழ்ச்சி..!

தமிழ் திரையுலகை பொருத்தவரை ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் பைக், கார் வாங்கி கொடுப்பார் என்பதும் அதேபோல் இயக்குனர் தங்களது