close
Choose your channels

தீபாவளி ரேஸில் திடீரென இணைகிறதா வெற்றிமாறன் திரைப்படம்? ரசிகர்களுக்கு குஷி..!

Saturday, June 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2024 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் ஏற்கனவே அஜித்தின் ’விடாமுயற்சி’ மற்றும் சூர்யாவின் ’கங்குவா’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்றும் அதேபோல் பிரதீப் ரங்கநாதனின் ’எல்ஐசி’ மற்றும் கவின் நடித்த ’கிஸ்’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி வெற்றிமாறனின் படமும் தீபாவளிக்கு ரிலீசாக திட்டப்படப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற நீண்ட விடுமுறை நாட்களில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்கள் வந்தால் மட்டுமே மாஸ் நடிகர்களின் படங்கள் மொத்தமாக வசூலை அள்ளி கொண்டு செல்கின்றன என்பது கடந்த சில ஆண்டுகளில் இருந்து தெரிய வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகும் போது இருக்கிறது. அஜித்தின் ’விடாமுயற்சி’ மற்றும் சூர்யாவின் ’கங்குவா’ நிச்சயம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த போட்டியில் வெற்றிமாறனின் ’விடுதலை 2’ படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

’விடுதலை’ படத்தின் முதல் பாகம் ஏற்கனவே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் நிச்சயம் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் தீபாவளிக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் மேற்கண்ட 5 படங்களில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகும்? எந்தெந்த படங்கள் பின்வாங்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment