close
Choose your channels

வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

Sunday, March 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் டிரைலர் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் இம்மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 31ஆம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் முதல் பாகத்தின் ரிலீஸ்க்கு பின் இரண்டாம் பாகத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெறும் என்றும் அந்த படத்தையும் இந்த ஆண்டுக்குள்ளேயே வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos