வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்.. அப்ப 'வாடிவாசல்' என்ன ஆச்சு?


Send us your feedback to audioarticles@vaarta.com


வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில், அவரது அடுத்த படம் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ என்றும், அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும், ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ’விடுதலை’ மற்றும் ’விடுதலை 2’ படங்களை தயாரித்த RS Infotainment நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஏற்கனவே 'ஆடுகளம்', 'பொல்லாதவன்', 'வடசென்னை' போன்ற படங்களில் இணைந்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணையும் 'வாடிவாசல்' திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது 'வாடிவாசல்' மீண்டும் தள்ளி வைக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மற்றுமொரு
— RS Infotainment (@rsinfotainment) January 13, 2025
தலைசிறந்த படைப்பை தந்த
இயக்குநர் திரு.வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு நன்றி #விடுதலைபாகம்2-ன் வெற்றிகரமான 25 நாள்
ரசிகர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள்,விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.… pic.twitter.com/hD3Gnhh2ap
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments