வெற்றி மாறனின் அடுத்த படம்.. இரண்டு பிரபல ஹீரோக்கள், இரண்டு பாகங்கள்?

  • IndiaGlitz, [Sunday,February 05 2023]

வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ என்ற திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’வாடிவாசல்’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்க இருக்கும் திரைப்படம் இரண்டு பாகங்கள் கொண்ட படம் என்றும் அந்த படத்தில் இரண்டு பிரபல ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபல தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்டிஆர் என்றும் இன்னொரு ஹீரோ தனுஷ் என்னும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் ஜூனியர் என்டிஆர், இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே தனுஷ் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் முதல் முறையாக ஜூனியர் என்டிஆர் இணைவதால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

லியோ.. விஜய்க்கு மட்டுமல்ல, இவருக்கும் 67வது படம் தான்: ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான 'லியோ' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில்

'லியோ' படத்தில் நடிக்கும் மிஷ்கின், கெளதம் மேனனுக்கு இவ்வளவு சம்பளமா?

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

வாணி ஜெயராம் இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் முக்கிய தகவல்..!

பிரபல பின்னாடி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமான நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் அனைத்து திரையுலகினர்களும் இரங்கல் தெரிவித்தனர். 

இயக்குனர் சுதா கொங்காராவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியான மருத்துவமனை புகைப்படங்கள்..!

பிரபல இயக்குனர் சுதா கொங்காரா விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

'வாத்தி' இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் மகன்கள்.. வைரல் புகைப்படம்..!

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.