புத்தக வெளியீட்டு விழாவில் வேதனையை வெளிப்படுத்திய வெற்றிமாறன்!

  • IndiaGlitz, [Sunday,September 26 2021]

சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் ம.தொல்காப்பியன் என்பவர் எழுதிய ’சினிமா ஒரு காட்சி இலக்கியம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது:

25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் விமர்சனங்களை பார்த்து வருகிறேன். விமர்சனத்தில் தனிநபர்களின் விருப்பு வெறுப்பு மற்றும் அவர்களது அரசியல் சார்பின் அடிப்படையில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. சினிமாவை ஒரு கலையாக பார்ப்பது குறித்த புத்தகங்கள் தமிழில் குறைவாகவே இருக்கிறது’ என்று வேதனையுடன் கூறினார். இந்த விழாவில் இயக்குனர் அமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் அவர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் என்பதும், அதனை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகர் சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை: இயக்குனர் தகவல்!

நடிகர் சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அவர் நடித்த படத்தின் இயக்குனர் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எழுந்து நடமாடும் யாஷிகா: நேரில் சென்று வாழ்த்திய தமிழ் நடிகர்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை யாஷிகா புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு தனது நண்பர்களுடன் காரில் வந்தபோது, அவர்கள் வந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிக்பாஸ் போட்டியாளர்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

நடிகை அமலாபாலின் கடற்கரை கிளாமர் போட்டோஷூட்! வைரல் புகைப்படங்கள்

பிரபல நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சபட்ச கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மாடல் பெண்ணாக மாறிய நரிக்குரவ பெண்: வீடியோ வைரல்

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சாக்லேட் என்ற பெண் மாடல் பெண்ணாக மாறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது