திரைத்துறைக்கு இது நல்லதல்ல.. நயன்தாரா படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்..!

  • IndiaGlitz, [Tuesday,January 16 2024]

நடிகை நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து கருத்து கூறிய இயக்குனர் வெற்றிமாறன், திரையுலகிற்கே இது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.

நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படத்தில் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இடம் பெற்றதை அடுத்து அந்த படத்தை நீக்குவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திரை உலகை சேர்ந்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் இது குறித்து கூறிய போது ’சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்படங்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும்.

ஆனால் தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு திரைப்படத்தை புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கு நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

More News

மாலத்தீவு செல்லவிருந்த திட்டத்தை கேன்சல் செய்துவிட்டேன்: பிக்பாஸ் தொகுப்பாளர் பேட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் குடும்பத்துடன் மாலத்தீவு சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவு செல்கிறேன்

'GOAT' பெயரில் இன்னொரு திரைப்படம்.. பொங்கல் போஸ்டர் வெளியானதால் பரபரப்பு..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு 'GOAT' என்ற டைட்டில் வைக்கப்பட்டது

'விடாமுயற்சி' அப்டேட்டே வரல்லை.. அதற்குள் 'அஜித் 63' பூஜை நடைபெற்றதா?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி'  படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் பொங்கல் அப்டேட் வரும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன்

குடும்பத்துடன் தனுஷ் கொண்டாடிய பொங்கல்.. ஒரே ஒரு நபர் மட்டும் மிஸ்ஸிங்..!

நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன்  பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வரும் ரசிகர்கள் ஒரே ஒருவர் மட்டும்

டைட்டில் வின்னர் பட்டம் அறிவித்த சில நிமிடங்களில் அர்ச்சனா போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

 பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவர் நடித்து வரும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.