close
Choose your channels

கமல்ஹாசன், விஜய்யுடன் இணைவது உண்மையா? வெற்றிமாறன் விளக்கம்

Thursday, October 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய்சேதுபதி நடித்து வரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் அடுத்ததாக அவர் சூர்யா நடிக்க உள்ள ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் விஜய்யுடன் இணைந்து திரைப்படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறன் இதுகுறித்து கூறியபோது, ‘என்னுடைய மற்ற பணிகளை முடித்துவிட்டு வாருங்கள் என்று விஜய் கூறியிருப்பதாகவும் விஜய்யுடன் படம் செய்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பது எனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும், என்னுடைய படங்களை முடித்துவிட்டு கண்டிப்பாக அவருடன் ஒரு படம் பண்ணுவதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது உண்மைதான் என்றும் அவர் என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல் பற்றி கேட்டு அறிந்து கொண்டார் என்றும் அவருடனான படத்தின் கலந்துரையாடல் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து எதிர்காலத்தில் கமல்ஹாசன் மற்றும் விஜய்யுடன் வெற்றிமாறன் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.