close
Choose your channels

வெற்றிமாறனின் 'விடுதலை' ரிலீஸ் தேதி இதுவா?

Thursday, September 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடித்த திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாக படப்பிடிப்பு நிறைவு பெற்றது என்பது தெரிந்ததே.

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்பாக படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணியும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

’அசுரன்’ படத்திற்கு பின்னர் வெளியாகும் வெற்றிமாறன் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ராஜீவ்மேனன், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos