வெற்றிமாறனின் 'விடுதலை' ரிலீஸ் தேதி இதுவா?

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி ஹீரோவாகவும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரிலும் நடித்த திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாக படப்பிடிப்பு நிறைவு பெற்றது என்பது தெரிந்ததே.

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்பாக படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த பணியும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

’அசுரன்’ படத்திற்கு பின்னர் வெளியாகும் வெற்றிமாறன் திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ராஜீவ்மேனன், பவானிஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

More News

கமல்ஹாசனுக்கு பாடம் சொல்லி கொடுத்த பிரபலம்.. 'இந்தியன் 2' படத்தின் சூப்பர் அப்டேட்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

மனைவி மகாலட்சுமிக்கு மாலை அணிவித்த ரவீந்தர்.. என்ன விசேஷம்?

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்த நிலையில் தற்போது தனது மனைவிக்கு மாலை அணிவிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள

சிரஞ்சீவி - நயன்தாராவின் 'காட்ஃபாதர்': மாஸ் டிரைலர் ரிலீஸ்

சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'காட்ஃபாதர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 

எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த நடிகையின் ரூ.20 கோடி சொத்து.. மீட்டு கொடுத்த தமிழக முதல்வர்!

எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகையின் 20 கோடி ரூபாய் சொத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீட்டு கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

காசியின் புனிதம் கலந்த காதல் காவியம் 'பனாரஸ்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது