close
Choose your channels

தொடங்கியது 'விடுதலை' பிசினஸ்.. மிகப்பெரிய தொகைக்கு சாட்டிலைட்,  டிஜிட்டல் உரிமை..!

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற தனுஷ் பாடிய பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு வெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. முதல் கட்டமாக இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜி5 நிறுவனமும் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியும் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டுமே மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட வியாபாரம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பல்ரது நடிப்பில் உருவான இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.