ரஜினி, அஜித், விஜய், சூர்யா.... 'அசுரன்' வெற்றிக்கு பின் பிசியாகும் வெற்றிமாறன்

  • IndiaGlitz, [Thursday,November 14 2019]

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் அபார வெற்றி இயக்குனர் வெற்றிமாறனை திரையுலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இந்த படம் குறித்து தன்னிடம் இரண்டு மணி நேரம் ஷாருக்கான் பேசியதாகவும், இந்த படத்தில் உள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் குறித்து அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்ததாகவும் இயக்குனர் வெற்றி மாறன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் ‘அசுரன்’ இந்தி ரீமேக் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், இந்த சந்திப்பு முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரஜினி, விஜய் இருவரையும் சந்தித்துக் கதைகள் சொல்லியிருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தைத் தொடர்பு கொள்வதற்கும் முயற்சி செய்ததாகவும், அவர்களுக்குச் சரியான நேரம் வரும்போது கூப்பிடுவார்கள் என நினைப்பதாகவும் கூறிய வெற்றிமாறன் நேரம் வரும்போது நிச்சயம் அஜித்துடன் படம் பண்ணுவோம்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும் சூரி ஹீரோவாக நடிக்கும் படம், நெட்பிளிக்ஸூக்காக ஒரு படம், சூர்யாவுடன் ஒரு படம் என திட்டமிட்டுள்ளதாக கூறிய வெற்றிமாறன், ‘வடசென்னை 2’ இப்போதைக்கு இல்லை என்றும், அதற்கான பட்ஜெட் அதிகம் என்பதால் தள்ளி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

More News

எம்ஜிஆர் கேரக்டருக்காக அரவிந்தசாமியின் அசத்தல் மாற்றம்: வைரலாகும் புகைப்படம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை 'தலைவி' என்ற டைட்டிலில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பதும்

சிவகார்த்திகேயன் படங்களில் பணிபுரிந்த அப்பா-மகள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' படத்தில் தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஷ்யாம் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாகும் தொலைக்காட்சி புகழ் டிடி!

ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான அனிமேஷன் திரைப்படமான 'Frozen 2' திரைப்படம் வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது

மனைவியின் மிரட்டலால் இதை செய்தேன்: 'சிங்கப்பெண்ணே' பாடலாசிரியர்

பிரபல பாடலாசிரியரும் விஜய்யின் 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கப்பெண்ணே' என்ற பாடலை எழுதியவருமான விவேக், தனது மனைவியின் மிரட்டலால் வசனகர்த்தாவாக மாறியதாக தெரிவித்துள்ளார்.

'தலைவர் 168' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை