close
Choose your channels

கன்னட சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கும் வெற்றிமாறன்

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் மூன்றே படங்களை இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர் இயக்குன வெற்றிமாறன். 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' மற்றும் 'விசாரணை' ஆகிய வெற்றி படங்களை அடுத்து வெற்றிமாறன் தற்போது தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தின் முதல் பாகத்தை இயக்கி வருகிறார்.

மொத்தம் மூன்று பாகங்களை கொண்ட 'வடசென்னை' படத்தின் முதல்பாகத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் 'வடசென்னை' படத்தின் மூன்று பாகங்களையும் இயக்கி முடித்த பின்னர் புனித் ராஜ்குமார் படத்தை இயக்கவுள்ளாரா? அல்லது முதல் பாகம் முடிந்த பின்னரே இயக்கவுள்ளாரா? என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.