படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள்.. வெற்றிமாறன் மாஸ் பிளான்..!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிப்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பணிகளில் இருக்கும் வெற்றிமாறன் திடீரென ’வாடிவாசல்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக லண்டன் சென்று உள்ளார்.. அங்கு அவர் கிராபிக்ஸ் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் ’வாடிவாசல்’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து லண்டனில் இருந்து அவர் இந்தியா திரும்பியவுடன் ’விடுதலை 2’ படத்தின் ஒரு சில படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. மேலும் ’விடுதலை 2’ படத்தை அவர் ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்திற்காக சூர்யா கடந்த சில மாதங்களாக காளையுடன் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் தமிழ் சினிமாவை புரட்டிப் போட வைக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

மனோபாலா மறைவுக்கு முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா இரங்கல்..!

நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் மனோபாலா இன்று திடீரென காலமானது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மனோபாலா மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்,

நல்லா தான் இருந்தாரு, திடீரென போய்விட்டார்.. மனோபாலா மறைவு குறித்து மகன் உருக்கம்..!

தனது தந்தை நல்லபடியாக உடல் நலம் தேறி வந்ததாகவும் திடீரென அவர் மறைந்து விட்டது தங்களை அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளதாகவும் மனோபாலாவின் மகன் பேட்டி அளித்துள்ளார் 

நடிகர் - இயக்குனர் மனோபாலா காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திடீரென 'தங்கலான்' படப்பிடிப்புக்கு செல்லாத விக்ரம்.. அதிர்ச்சி காரணம்..!

சியான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பில் விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவரும்

விஜய்யின் மகள் ஜனனி, மகனாக நடிப்பது யார் தெரியுமா? 'லியோ' படத்தின் சூப்பர் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் அவரது மகளாக பிக்பாஸ் ஜனனி நடித்து வருவதாக கூறப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தளபதி விஜய்யின் மகனாக நடிக்கும்