யாருக்கு ஓட்டு போட வேண்டும்? 'வேட்டையன்' இயக்குனர் ஞானவேல் பதிவால் ரஜினி அதிருப்தியா?

  • IndiaGlitz, [Wednesday,April 17 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஞானவேல் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர் என்பதும், அவர் பாஜகவுக்கு தான் தன்னுடைய வாக்கை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஞானவேல் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.

மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

‘வேட்டையன்’ இயக்குனர் ஞானவேலின் இந்த பதிவை பார்த்து ரஜினி அதிருப்தி அடைவாரா? அல்லது சினிமா வேறு, அரசியல் வேறு என்று சகஜமாக எடுத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

மிஸ்டர் மனைவி சீரியல்.. ஷபானாவுக்கு பதில் இந்த நடிகையா?

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பான 'மிஸ்டர் மனைவி' என்ற சீரியலில் அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென

அஜித் மகனுக்கும் சத்யராஜ் பேரனுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை.. வைரல் வீடியோ..!

அஜித் மகனுக்கும் சிபிராஜ் மகனுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வேற லெவல் வெறித்தனமான வொர்க்-அவுட்.. ஐஸ்வர்யா ரஜினியின் லேட்டஸ்ட் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வேற லெவலில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எங்க அம்மாவுக்கு ஓட்டு போடுங்க.. ராதிகா மகள் தேர்தல் பிரச்சார வீடியோ..!

நடிகை ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜக  வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம்

இந்த பாடலுக்கு அழிவே இல்லையா? மீண்டும் டிரெண்ட் ஆகும் 'கண்மணி அன்போடு காதலன் நான்'..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'குணா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடல் திரைப்படம் ரிலீஸ் ஆன போதே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும்