விஜிபி சிலை மனிதன் குறித்த வதந்தி: அவரே அளித்த விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,September 23 2020]

சென்னை விஜிபி கடற்கரையான கோல்டன் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பார்ப்பது வாயில் அருகே உள்ள அசையாமல் நிற்கும் நபரைத்தான் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 30 ஆண்டுகளாக சென்னை விஜிபி கோல்டன் கடற்கரையில் அசையாமல் இருந்து அனைவரையும் சிரிக்க வைத்த இந்த சிலை மனிதரின் பெயர் தாஸ் என்பதாகும். இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக பெரும்பாலான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியானது. அவரது மறைவுக்கு சென்னை கோல்டன் பீச் நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்தியதாகவும் கூறப்பட்டது

ஆனால் சிலை மனிதன் தாஸ் அவர்கள் விஜிபி கோல்டன் பீச் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் உடல்நலத்துடன் நல்லபடியாக இருப்பதாகவும், தனக்கு ஒன்றும் இல்லை என்றும் தன்னுடைய மரணம் குறித்து வெளிவந்த அனைத்து செய்திகளும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.

மேலும் அரசு அனுமதி அளிக்கப்பட்டவுடன் மீண்டும் கோல்டன் பீச் திறக்கப்படும் என்றும் அப்போது சுற்றுலா பயணிகள் அனைவரும் தன்னை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது