close
Choose your channels

'கடைக்குட்டியை பாராட்டிய இந்தியாவின் உயர்ந்த மனிதர்

Tuesday, July 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, சாயிஷா நடிப்பில் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படம் என்று போற்றப்படும் இந்த படத்திற்கு திரையுலகினர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும் வெங்கையாநாயுடு அவர்கள் இந்த படத்தை பார்த்து படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான 'சின்னபாபு' படத்தை தான் பார்த்ததாகவும், கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பாராட்டு படக்குழுவினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.