அவங்களா வலையில வந்து விழுறாங்க.. விசித்ரா கூறியது யாரை? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,November 14 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலிருந்து இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக வருகிறது. குறிப்பாக மாயா, பூர்ணிமா, ஜோவிகா என்ற கூட்டணி அமைந்த உடன் இந்த கூட்டணி அதிக ஆட்டம் போட்டு வருகிறது

குறிப்பாக பிரதீப் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி அவரை வெளியேற்றியதில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த கூட்டணி அடங்காத கூட்டணியாக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரமோ வீடியோவில் இந்த கூட்டணி குறித்தும், ஜோவிகா குறித்தும் விசித்ரா கூறும் காட்சி உள்ளது. அதில், ‘கேம்ன்னு நினைச்சு ஜோவிகா ஆடலை, அவங்களா வலையில வந்து விழுறாங்க. ஜோவிகாகிட்ட எதார்த்தமா தான் நான் படிப்பு பற்றி கூறினேன், ஆனால் அதை பெரிய பிரச்சனையாக்கியது ஜோவிகா தான் என்று கூறினார்.

அதற்கு தினேஷ், ‘அவங்க மட்டும் கேம் விளையாடுவாங்க, ஆனால் நாம விளையாட கூடாதுன்னு நினைக்கிறாங்க, அதெப்படி ஆடாம இருக்க முடியும்’ என்று கூற ‘மொத்தத்துல அவங்க ஒரு விஷமான உறவில் இருக்காங்க’ என்று விசித்ரா கூறுகிறார்.

பிரதீப் வெளியேற்றத்திற்கு பின்னரும் இந்த மாயா-பூர்ணிமா கூட்டணி தனது பாணியை மாற்றி கொள்ளவில்லை என்பதால் விரைவில் பிரதீப் பிரச்சனை போல் இன்னொரு பிரச்சினை எழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

நண்பருக்கு ஒரு லட்டு, எதிரிக்கு ஒரு லட்டு.. பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட் டாஸ்க்..!

கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் வைக்கப்படுகிறது

பிரதீப்புக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறதா? விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இனிமேல் பாக்க முடியுமா? பாத்தாலும் தடவி தூங்க வைக்க முடியுமா? ஐஷுவை நினைத்து புலம்பும் நிக்சன்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஷு வெளியேறியது நிக்சனை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் அவர் பார்க்கும் போட்டியாளர்களிடம் எல்லாம் ஐஷு வெளியேறியது குறித்து புலம்பி வரும்

இதுவரை இல்லாத வகையில் 5 வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள்.. 'கங்குவா' குறித்து பிரபலம் தகவல்..!

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் 'கங்குவா' படத்தில் இடம் பெற்றுள்ளதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'சிங்கப்பூர் சலூன்' படத்தில் லோகேஷ் கேரக்டர் இதுதான்.. ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சிங்கப்பூர் சலூன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.