ஷாப்பிங் சென்றாரா சசிகலா? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையில் தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகளை லஞ்சம் கொடுத்து பெற்றதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் ரூபா டிரான்ஸ்பர் செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களிலும் முன்னணி ஊடகங்களிலும் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சசிகலாவும், இளவரசியும் ஷாப்பிங் செய்துவிட்டு மீண்டும் சிறைக்குள் திரும்புவது போன்ற காட்சி உள்ளது.

இந்த வீடியோவில் சசிகலா பெங்களூரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றின் பை ஒன்றை கையில் வைத்திருந்ததாகவும், இதனால் அவர் ஷாப்பிங் சென்றுவிட்டு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி கூறியபோது, 'பாகுபலி' படத்தையும் மிஞ்சிய கிராபிக்ஸ் வீடியோதான் இது. இதுபோன்ற செயல்களை மேலும் தொடர்ந்தால் இதுகுறித்து துணைபொதுச்செயலாளரிடம் ஆலோசனை கேட்டு வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.

More News

கமல்ஹாசனிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்கு: அரசியல் கட்சி தலைவர் அறிவிப்பு

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சர்ச்சைக்குரிய வார்த்தை ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் இன்னொரு நடிகையை பார்த்து கூறினார்...

'விவேகம்' படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது.

எம்ஜிஆர், சிவாஜி, கமல் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டா ஜூலி! கஞ்சா கருப்பு

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றபட்ட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தனது அனுபவங்களை பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்

போதை மருந்து விவகாரம்: பிரபல நட்சத்திரங்களுக்கு குறிக்கப்பட்ட தேதிகள்

ஐதராபாத்தில் சமீபத்தில் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் குறித்து தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் 11 பேருக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறித்து வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

அரசு பள்ளியில் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்: குவியும் பாராட்டுக்கள்

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. தொண்டுள்ளம் கொண்ட ஆசிரியர்கள் சிலர் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து டிஜிட்டல் வகுப்பறைகளாக மாற்றி வருவது குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்...