படுக்கைக்கு அழைத்த இயக்குனரை சமாளித்த வித்யாபாலன்: சென்னையில் நடந்த திடுக் சம்பவம்..!

  • IndiaGlitz, [Saturday,March 11 2023]

சென்னையில் இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அவரிடம் வித்தியாசமான முறையை கையாண்டதை அடுத்து தனது எண்ணம் ஈடேறாமல் அந்த இயக்குனர் சென்று விட்டதாகவும் சென்னையில் நடந்த திடுக்கிடும் சம்பவம் ஒன்றை சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் வித்யா பாலன் என்பதும் ’ஓம் சாந்தி ஓம்’ ’கஹானி’ உள்பட பல வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தி டர்ட்டி பிக்சர்ஸ்’ என்ற திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது என்பதும் இந்த படத்தின் மூலம் அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்த நடிகை வித்யா பாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை படுக்கைக்கு அழைத்த சென்னையைச் சேர்ந்த இயக்குனர் ஒருவர் குறித்து கூறியுள்ளார். ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக நான் ஒப்பந்தம் ஆனதாகவும், சென்னையில் அந்த இயக்குனர் தன்னை நேரில் காண வேண்டும் என்று கூறியதை அடுத்து அவரை பார்க்கச் சென்று இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

அந்த இயக்குனர் மறுநாள் தன்னை ஹோட்டல் அறைக்கு வரச் சொல்லியபோது தனக்கு சந்தேகமாக இருந்தது என்றும் தனது வாழ்க்கையில் இதுவரை படுக்கைக்கு அழைத்த இயக்குனரையே தான் சந்தித்தது சந்தித்ததில்லை என்பதால் அவரிடம் சுதாரிப்பாக இருக்க முடிவு செய்தேன் என்றும் கூறினார்.

இயக்குனரின் அறைக்கு சென்ற பிறகு நான் கதவை திறந்து வைத்திருந்தேன், அது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, கதவை திறந்து வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்ததால் அவரால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியவில்லை, அதனால் ஒரு கட்டத்தில் அவர் எழுந்து வெளியேறிவிட்டார் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக அந்த விளம்பர படத்திலிருந்து தான் நீக்கப்பட்டேன், இருப்பினும் எனக்கு மகிழ்ச்சி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாலிவுட் திரை உலகை பொருத்தவரை எனக்கு படுக்கைக்கு அழைக்கும் சம்பவமே நடைபெறவில்லை என்பதால் அந்த வகையில் நான் அதிர்ஷ்டம் அடைந்தவர் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை வித்யா பாலனின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

More News

ஈரோடு மகேஷ் மனைவியா இவர்? செம ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

தொலைக்காட்சி பிரபலமான ஈரோடு மகேஷ் தனது மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை சமீபத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

நிஜமா? நம்ம திவ்யபாரதியா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து நம்ம திவ்ய பாரதியா இது? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். 

60 வயது நடிகருக்கு 4வது திருமணம்.. 44 வயது நடிகையை மணந்தார்..!

60 வயதில் நடிகர் ஒருவர் 44 வயது நடிகை திருமணம் செய்து கொண்டார் என்பதும் நடிகருக்கு இது நான்காவது திருமணம் என்பதும், நடிகைக்கு இது இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

'ASVINS': வசந்த் ரவி நடிப்பில் சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படம்..!

'தரமணி' மற்றும் 'ராக்கி' ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான வசந்த் ரவி, தற்போது சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரான 'ASVINS' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்ட நித்யானந்தா.. நன்றி தெரிவித்த இயக்குனர் மோகன் ஜி..!

இயக்குனர் மோகன் ஜிக்கு வாழ்த்து தெரிவித்து நித்யானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு தனது நன்றிகள் என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.