மேலும் ஒரு புதுவகை கொரோனா? காற்றில் வேகமாகப் பரவுவதாகப் பகீர் தகவல்!

கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றும் வரை சற்றும் குறையாமல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் அலையின்போது ஏற்படுத்திய கொரோனா வைரஸின் மரபணு பின்னர் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா எனப் பல இடங்களில் உருமாற்றம் அடைந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய கொரோனா வைரஸின் மரபணு மட்டும் 7 விதமாக உருமாற்றம் அடைந்ததாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வியட்நாமில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது பிரிட்டன் வகையில் இருந்து உருமாற்றம் அடைந்து இருக்கலாம் என்றும் மற்ற வைரஸ்களை விட இந்த வைரஸ் காற்றில் அதிவேகமாகப் பரவும் தன்மைக் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

உலகில் முதல் முதலான சீனாவில்தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாட்டுடன் நேரடியாக எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வியட்நாமில் கடந்த ஆண்டு வரை வெறும் 270 பாதிப்புகள் மட்டுமே கண்டறியப்பட்டன. காரணம் சீனாவோடு இருந்த தொடர்பை முதலில் துண்டித்துக் கொண்ட வியட்நாம் அடுத்ததாக உலகத் தொடர்புகளில் இருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டது.

மேலும் 9.5 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பே ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டன. இதனால் பாதிப்புகளை முழுமையாகக் குறைத்து உலகிற்கே வியட்நாம் ஒரு பெரும் எடுத்துக் காட்டாக திகழ்ந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வியட்நாமில் புதிதாக 3,600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டின் மொத்த பாதிப்பு 7,168 ஆகவும் உயிரிழப்பு 42 ஆகவும் பதிவாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வியட்நாமில் தற்போது காற்றில் அதிவேகமாகப் பரவும் புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் புது அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தென்ஆப்பிரிக்காவில் பரவிய கொரோனா வைரஸ் 7 விதமாக உருமாற்றம் அடைந்தது போலவே வியட்நாமில் தற்போது பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸில் 7 வேரியேஷன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

தயவுசெய்து உதவி செய்யுங்கள்: விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்!

விஜய் நடித்த 'தெறி' உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை சுனைனா சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதை உடனடியாக கவனியுங்கள்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வைத்த வேண்டுகோள்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தமிழகத்தின் நலன் கருதி புதிய அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், வேண்டுகோள்களையும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் விடுத்து

இயக்குனர் விஜய் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்

அஜித் நடித்த 'கிரீடம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் 'மதராசப்பட்டினம்' 'தெய்வத்திருமகள்' 'தலைவா' 'சைவம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இவர்

கொரோனா நேரத்தில் ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரதமர்!

இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஜெயில் வாழ்க்கையே பெட்டர்… கொரோனா பயத்தால் சிறை கைதிகள் கதறல்!

கொரோனா பரவல் காரணமாக சிறையில் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தது