close
Choose your channels

'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் எப்போது? விக்னேஷ் சிவன் தகவல்

Wednesday, August 30, 2017 • தமிழ் Comments

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது இயக்குனர் அதை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் உள்ளது. அதுவும் விரைவில் முடிந்துவிடும். அதன் பின்னர் டீசர் உள்பட அனைத்து விபரங்களையும் அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். எனவே இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை வெகுவிரைவில் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒருசிலர் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து அதை இணையதளங்களில் பதிவு செய்கின்றனர். அப்படி செய்வதால் படத்தின் சுவாரஸ்யம் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், ரசிகர்கள் இந்த மாதிரியான செயல்களை செய்ய வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.