close
Choose your channels

5வது வருட காதலை கொண்டாடிய விக்னேஷ்-நயன்: வைரலாகும் புகைப்படங்கள்

Saturday, February 15, 2020 • தமிழ் Comments

கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஒவ்வொரு காதலர் தினத்தின் போதும் இணைந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் 

அந்த வகையில் நேற்றைய காதலர் தினம் விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல் ஜோடிக்கு ஐந்தாவது காதலர் தினமாக உள்ளது. இதனை அடுத்து இருவரும் இணைந்து கொண்ட புகைப்படங்கள் விக்னேஷ் சிவனின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் படம் நயன்தாரா காதல் ஜோடிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள அடுத்த திரைப்படமான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz