நயன்தாராவின் 'டோரா'வுக்கு 'A' சர்டிபிகேட். விக்னேஷ்சிவனின் வித்தியாசமான கமெண்ட்

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரா' என்ற திகில் திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கு கடந்த வாரம் சென்சார் அதிகாரிகள் 'A' சர்டிபிகேட் அளித்தனர். இந்த படத்தின் திகில் காட்சிகளுக்காக 'A' சர்டிபிகேட் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு கிடைத்த 'A' சர்டிபிகேட் கிடைத்துள்ளது குறித்து நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தளத்தில் வித்தியாசமான கமெண்ட்டை பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'மாநகரம்', 'துருவங்கள் 16' படங்களுக்கு சென்சார் போர்டு 'U/A'சர்டிபிகேட் கொடுத்தது. ஆனால் மக்கள் இந்த படங்களை வெற்றி பெற செய்து 'U' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். அதைபோல் நயன்தாராவின் 'டோராவும் மக்களிடம் 'U' சர்டிபிகேட் பெறும் என்று பதிவு செய்துள்ளார்.
பெரும்பாலான படங்கள் தற்போது 'U' சர்டிபிகேட்டை எதிர்பார்ப்பது தமிழக அரசின் வரிவிலக்கிறாக மட்டுமே என்ற நிலையில் டைட்டில் முதல் காட்சி அமைப்புகள் வரை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் உருவாகியுள்ள 'டோரா' மிகப்பெரிய வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வியாபாரம் 'A' சர்டிபிகேட் காரணமாக எந்தவிதத்திலும் பாதிப்பு இல்லாததே இந்த படத்திற்கு கிடைத்த அட்வான்ஸ் வெற்றியாக கருதப்படுகிறது.

More News

சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் சூர்யா?

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'மகாநதி' என்ற பெயரில் உருவாகவிருக்கின்றது என்பதும், இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளார் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...

'கடுகு' சிறுத்தாலும் காரம் குறையாத ஓப்பனிங் வசூல்

சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ள 'கடுகு' திரைப்படம், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியை நிரூபித்துள்ளது...

எங்கிட்டே மோதாதே - பாம்புச்சட்டை படங்களின் ஓப்பனிங் வசூல் விபரங்கள்

நட்டி நட்ராஜ் நடித்த 'எங்கிட்டே மோதாதே' மற்றும் பாபிசிம்ஹா-கீர்த்திசுரேஷின் 'பாம்புச்சட்டை' ஆகிய படங்கள் ரிலீசுக்கு முன்னர் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கலவையான விமர்சனம் காரணமாக சராசரி ஓப்பனிங் வசூலையே பெற்றுள்ளது...

தலைவர் ரஜினி குறித்து தவறாக பேசுவதா? ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்து அதுகுறித்து ஒரு விளக்க அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். ரஜினியின் இலங்கை பயண ரத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில அரசியல்வாதிகளும், சமூக வலைத்தள பயனாளிகளும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர்கரும், நடிகர், இய

மூன்றாவது வாரத்திலும் முன்னிலை வசூல் பெற்றுள்ள 'மாநகரம்'

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் இளையதலைமுறை இயக்குனர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி திரைப்படங்களை உருவாக்குவதால் முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அவர்களுக்கு அமைந்து வருகிறது...