close
Choose your channels

நீ என் உலக அழகியே, உன்னைப்போல் ஒருத்தி இல்லையே: வெலன்சியாவில் நயனை வர்ணித்த விக்கி!

Monday, August 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிகள் சமீபத்தில் இரண்டாவது தேனிலவுக்காக ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா சென்றார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பார்சிலோனாவில் உள்ள பழமையான இடங்களில் நயன், விக்கி தம்பதிகள் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின என்பதும், இந்திய சுதந்திர தினத்தை அவர்கள் பார்சிலோனாவில் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகின என்பதும் தெரிந்ததே.

தற்போது பார்சிலோனா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு, வெலன்சியா என்ற பகுதிக்கு சென்றுள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள், அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர்.

வெலன்சியாவில் உள்ள சரித்திர புகழ் பெற்ற இடங்களில் எடுக்கப்பட்ட நயன்தாராவின் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ள விக்னேஷ் சிவன், ‘நீ ஏன் உலக அழகியே, உன்னைப் போல் ஒருத்தி இல்லையே! என் உலக அழகியும் இவ்வுலகத்தின் அழகும்’ என்று கவிதையை பதிவு செய்து புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.