ஹனிமூனை முடித்துவிட்டு கிளம்புகிறார்களா விக்கி-நயன்: வைரல் புகைப்படங்கள்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களுக்கு முன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்துக்கு பின்னர் இந்த தம்பதிகள் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

தாய்லாந்து நாட்டில் ஹனிமூன் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்த நிலையில் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய்லாந்து சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கும் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் விக்னேஷ் சிவன் நன்றி கூறியுள்ளார். இதனை அடுத்து விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் ஹனிமூனை முடித்துவிட்டு நாடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதிவில் விக்னேஷ் சிவன், ‘மிகக் குறுகிய கால அறிவிப்புக்கு பின்னர் நீங்கள் எங்களுக்கு சரியான திட்டமிட்டு எங்களுக்கு நல்ல பயணத்தை அமைத்து கொடுத்தீர்கள். அதேபோல் நாங்கள் தங்கிய ஹோட்டல் நிர்வாகத்திற்கும் மிகவும் நன்றி. வீட்டு சமையல் சாப்பிடுவது போலவே எங்களை உணர வைத்தீர்கள். அழகான சூழல் மற்றும் அற்புதமான உணவுக்காக உங்களை நாங்கள் மீண்டும் சந்திப்போம்’ என்று பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து இன்று அல்லது நாளை விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள் ஹனிமூனை முடித்துவிட்டு நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழகத்தில் கிடைத்த மாபெரும் வரவேற்பு: தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது 'மாயோன்'

சிபிராஜ் நடித்த 'மாயோன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தில் 'மாயோன்'படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கிலும் இந்த  படத்தை மிக பிரம்மாண்டமாக

கங்கனா ரனாவத் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்: வைரல் புகைப்படம்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கங்கனா ரணாவத் உடன் இணைந்து பணிபுரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 

ஜூலை 1ல் மோதும் 3 பிரபலங்களின் படங்கள்: மூன்றும் வெற்றி பெறுமா?

வரும் ஜூலை 1ஆம் தேதி மூன்று பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில் மூன்றில் எந்த படம் வெற்றி பெறும் அல்லது மூன்றும் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

ஷங்கருடன் ஒரு அற்புத பயணம்: 'ஆர்சி 15' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபலம்!

இயக்குனர் ஷங்கருடன் ஒரு அற்புத பயணம் என ராம் சரண் தேஜாவின் 15வது படத்தில் பணிபுரியும் பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

'சீதா நீ யாரு? : துல்கர் சல்மான், ராஷ்மிகாவின் 'சீதா ராமன்' டீசர்!

பிரபல நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த 'சீதாராமன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின்